எச்சரிக்கை : மின்னல் தாக்கி இரண்டு பேர் பரிதாபமாகப் பலி!!

610

பொலன்னறுவை அருகே மின்னல் தாக்கியதில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளதாக பொலிசார் அறிவித்துள்ளனர். இந்தச்சம்பவம் சனிக்கிழமை மாலை பொலன்னறுவையின் வெலிக்கந்தை பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

வெலிகந்தை, மகுல்பொக்குணை பிரதேசத்தின் வயல்வெளியில் வேலைசெய்து கொண்டிருந்த நிலையில் மின்னல் தாக்குதல் காரணமாக குறித்த இருவரும் உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்தவர்களில் 17 வயதுச் சிறுவன் ஒருவரும் உள்ளடங்கியுள்ளதுடன் மற்றவர் 36 வயதான நடுத்தர வயதுடையவர் என்று தெரிய வருகின்றது. இருவரும் ஒரே குடும்பமொன்றைச் சேர்ந்தவர்கள் என்று பொலிசார் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பாக பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.