உள்ளாடைக்குள் மறைத்து தங்கத்தை கடத்தி வந்தவர் பிடிபட்டார்!!

914

goldதங்கத்தின் விலையில் இந்தியாவிற்கும் தாய்லாந்துக்கும் இடையே கணிசமான அளவு வித்தியாசம் இருக்கிறது.

இதனால் தாய்லாந்தில் இருந்து தங்கத்தை கடத்தும் செயல் அதிகரித்துள்ளது.

இந்நிலையில் இன்று பாங்கொக்கில் இருந்து ஐதராபாத் ஷாம்ஷாபாத் சர்வதேச விமான நிலையத்திற்கு வந்த தாய் ஏர்லைன்ஸ் விமானத்தில் வந்த பயணிகளை சுங்க அதிகாரிகள் சோதனையிட்டனர்.

அப்போது விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த சுரேஷ் என்பவர் ஒரு கிலோ தங்கத்தை தனது உள்ளாடைக்குள் மறைத்து கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த தங்கத்தை பொலிசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதேவேளை, கடந்த மாதம் 25ம் திகதி ஐதராபாத்தைச் சேர்ந்த செய்யது ஜாபர் அலி கான் என்பவர், பாங்கொக்கில் இருந்து ஒரு கிலோ தங்கம் கடத்தி வந்தபோது ஐதராபாத் ஷாம்ஷாபாத் விமான நிலையத்தில் பிடிபட்டார்.