இலங்கை சுற்றுலா துறை அமைச்சர் ஜோன் அமரதுங்க, இளம் பெண்களுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களால் சர்ச்சை நிலை ஏற்பட்டுள்ளது. குறித்த புகைப்படங்கள் சில சமூக வலைத்தளங்களில் வெளியாகிய நிலையில் சர்ச்சை ஏற்பட்டதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
எதிர்வரும் ஜுன் மாதம் 16ஆம் திகதி சர்வதேச மட்டத்திலான மொடலிங் போட்டி இலங்கையில் இடம்பெறவுள்ளது. கொழும்பு, கலதாரி ஹோட்டலில் பீ.டீ.என்டர்டென்மன்ட் நிறுவனத்தினால் இந்த போட்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த போட்டிக்கு Miss Tourism SriLanka to Miss Tourism World 2018, Mister Ocean SriLanka to Mister Ocean International 2018, Global Charity Queen 2018 மற்றும் The Young Beauty of SriLanka 2018 என பெயரிடப்பட்டுள்ளது.
இந்த போட்டிகளுக்கு பயிற்சி வழங்கும் நடவடிக்கைகள் பீ.டீ.என்டர்டென்மன்ட் நிறுவனத்தின் தலைமையில் சுற்றுலா அமைச்சில் நடைபெற்று வருகின்றது.
இறுதி போட்டியில் உள்நாட்டு, வெளிநாட்டு மொடலிங் கலைஞர்கள், நடிகர்கள், நடிகைகள், IPl கிரிக்கெட் வீரர்கள் உட்பட பலர் கலந்து கொள்ளவுள்ளனர்.
இதன் பயிற்சியை அவதானிக்க சென்ற அமைச்சர் ஜோன் அமரதுங்க அங்குள்ள மொடலிங் கலைஞர்களுடன் எடுத்து கொண்ட புகைப்படங்கள் சில ஊடகங்களில் வெளியாகியிருந்தன.
புகைப்படங்கள் வெளியானமையினால் சர்ச்சை நிலை ஏற்பட்டது. இந்நிலையில் அதனை தெரிவுபடுத்தும் வகையில் உண்மை நிலை வெளியாகி உள்ளது.