பூமியை நோக்கி வரும் செயற்கைக்கோள் : விஞ்ஞானிகள் அதிர்ச்சி!!

438

alos-satellite-sensorஐரோப்பிய விண்வெளி ஆய்வுக்கழகம் சில மாதங்களுக்கு முன்பு கடல் ஆராய்ச்சிக்காக ஒரு செயற்கைக்கோளை செலுத்தி இருந்தது. பூமிக்கு மேற்பரப்பில் சுழன்றபடி அது ஆய்வு பணியில் ஈடுபட்டிருந்தது.

கடந்த மாதம் அந்த செயற்கைக்கோள் எதிர்பாராத விதமாக பழுதடைந்தது. இதனால் அந்த செயற்கைக்கோளை ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மைய அதிகாரிகள் கைவிட்டனர்.

இந்த நிலையில் அந்த செயற்கைக்கோள் பூமியை நோக்கி வரத் தொடங்கியது. இதனால் விஞ்ஞானிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தினமும் 2½ மைல் அது கீழே இறங்கியது.

நேற்று அந்த செயற்கைக்கோள் பூமியில் இருந்து 113 மைல் தொலைவில் இருந்தது. 88 நிமிடங்களுக்கு ஒரு தடவை பூமியை சுற்றும் அந்த செயற்கைக்கோள் இன்னும் ஓரிரு நாளில் பூமியில் விழ உள்ளது.

ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு அல்லது திங்கட்கிழமை அதிகாலை 200 பவுண்ட் எடை கொண்ட அந்த செயற்கை கோள் பூமியில் விழக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது. ஆனால் பூமியில் எந்த பகுதி மீது, எத்தனை மணிக்கு அது விழும் என்பதை விஞ்ஞானிகளால் துல்லியமாக கணிக்க முடியவில்லை.

எனவே அந்த செயற்கை கோள் வருகையை விஞ்ஞானிகள் கண்காணித்தப்படி உள்ளனர்.