யாழிலிருந்து கொழும்புக்கு சென்ற மனைவியைக் காணவில்லை : கணவன் பொலிஸில் முறைப்பாடு!!

708

Missingயாழிலிருந்து கொழும்பு வைத்தியசாலைக்கு கண் பரிசோதனைக்காக சென்ற தனது மனைவியைக் காணவில்லையென கணவன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

யாழ். அராலி மேற்கு வட்டுக்கோட்டையைச் சேர்ந்த ஜெயவதனி (29) என்பவரே கடந்த மாதம் 14ம் திகதியிலிருந்து காணாமல் போயுள்ளார் என அவரது கணவரான நாகநாதன் என்பவரால் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் நேற்று முன்தினம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்