அப்பாவி இலங்கை தமிழ் இளைஞன் பிரித்தானியாவில் கொலை!!

551

பிரித்தானியாவில் புதிய வாழ்க்கை ஒன்றை தேடி சென்ற இலங்யைர் ஒருவர் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டுள்ளார். 26 வயதான உத்தம வில்லன் எனப்படும் அருனேஷ் தங்கராஜா என்பவரே கொலை செய்யப்பட்டுள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் வீடற்ற நிலையில் வாழ்ந்து வந்த ஒருவர் என தெரியவந்துள்ளது.

நேற்று காலை குறித்த இளைஞன் Mitcham என்ற பகுதியில் கொடூரமாக கத்திக்குத்துக்கு இலக்காகி படு காயமடைந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார்.

அவரை காப்பாற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டபோதும், அவை பலனளிக்கவில்லை என்று அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொலை செய்தமை தொடர்பில் 44 வயதுடைய சந்தேகநபர் ஒருவரை ஸ்கொட்லாந்து பொலிஸார் கைது செய்துள்ளனர்.

உயிரிழந்தவர் மிகவும் அன்பான மற்றும் நட்பான ஒருவர் எனவும், யாருக்கும் எந்த ஒரு பிரச்சினையையும் ஏற்படுத்தாதவர் என அவரது நண்பர்கள் தெரிவித்துள்ளனர்.

மிகவும் நல்ல மனிதர் அவர் யாருக்கு உதவி தேவைப்படுகின்றதோ அவர்களுக்கு கைகொடுக்கும் ஒருவராக வாழ்ந்தார் என பெயர் கூற விரும்பாத ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

அவர் நன்கு மது அருந்தினார், அவருக்கு ஒரு வீடேனும் இல்லை. எனினும் யாருக்கு வேண்டும் என்றால் ஓடி சென்று உதவுவார். தனது பையில் இறுதியாக உள்ள பணத்தை கேட்டாலும் அவர் கொடுப்பார். மிகவும் நல்ல மனிதன். எல்லோருக்கும் நல்லவராகவே இருந்தார். யாருடனும் மோதலுக்கு அல்லது வாய் தகராறுகளுக்கு அவர் செல்ல மாட்டார். அவரால் யாருக்கும் ஆபத்து இல்லை என இன்னும் ஒரு நண்பர் கூறியுள்ளார்.

அவது குடும்பத்தினர் யாரும் பிரித்தானியாவில் இல்லை. கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் தந்தை உயிரிழந்துள்ளார். உயிரிழந்த இளைஞனின் மரணத்திற்கு நியாயம் பெற்று கொடுக்கப்படும்.

அவரது குடும்பத்தினருக்கு இந்த மரணம் தொடர்பில் அறிவிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இது மிகவும் மோசமான ஒரு செயற்பாடாகும். பிரித்தானிய தலைநகரில் இந்த வருடத்தில் மாத்திரம் 60 பேர் இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாக லண்டன் மேயர் Sadiq Khan தெரிவித்துள்ளார்.