200வது விக்கெட்டை கைப்பற்றிய சச்சின்!!

315

sachi-bowசச்சின் டெண்டுல்கர் சர்வதேச போட்டியில் 200வது விக்கெட் கைப்பற்றினார். கிரிக்கெட்டின் சகாப்தமான டெண்டுல்கர் கடந்த ஆண்டு ஒருநாள் போட்டியில் ஓய்வு பெற்றார். டெஸ்ட் போட்டியில் மட்டுமே விளையாடி வந்தார்.

இதற்கிடையே தனது 200வது டெஸ்ட் போட்டியோடு ஓய்வு பெறுவதாக அறிவித்தார். மேற்கிந்திய தீவுகளுக்கெதிராக தற்போது நடைபெறும் டெஸ்ட் தொடர் அவரது பிரிவுபச்சார டெஸ்ட் தொடர் ஆகும். கொல்கத்தா டெஸ்ட் அவருக்கு 199வது போட்டியாகும்.

இப் போட்டியில் டெண்டுல்கர் பந்துவீச அணித்தலைவர் டோனி வாய்ப்பு கொடுத்தார். அவர் 2 ஓவர் வீசி 5 ஓட்டங்கள் கொடுத்து 1 விக்கெட் கைப்பற்றினார். ஷில்லிங் போர்ட் விக்கெட்டை எல்.பி.டபிள்யூ முறையில் அவுட் செய்தார். டெஸ்ட் போட்டியில் அவர் கைப்பற்றிய 46வது விக்கெட் ஆகும்.

இதன்மூலம் சர்வதேச போட்டியில் டெண்டுல்கர் 200 விக்கெட்டை கைப்பற்றி முத்திரை பதித்தார். ஒருநாள் போட்டியில் 463 ஆட்டத்தில் 154 விக்கெட் கைப்பற்றி இருந்தார். இந்த இரண்டையும் சேர்த்து அவர் 200 விக்கெட்டை தொட்டுள்ளார்.