எவரஸ்ட் சிகரத்தை அடைந்து சாதனை படைத்த இலங்கையர் : விடாமுயற்சியின் பலன்!!

396

உலகின் மிக உயரமான எவரஸ்ட் சிகரத்தை அடைந்த இலங்கையின் முதலாவது வீரர் என்ற சாதனையை யோஹான் பீரிஸ் பதிவு செய்துள்ளார்.

இவர் எவரஸ்ட் சிகரத்தில் ஏறிய இரண்டாவது இலங்கையராவார். இவருக்கு முன்னதாக ஜெயந்தி குரு உதும்பால என்ற இலங்கைப் பெண் முதலாவது சாதனையை படைத்திருந்தார்.

அந்த வகையில், நேபாள நேரப்படி இன்று காலை 5.55 மணியளவில் யோஹான் பீரிஸ் எவரஸ்ட் சிகரத்தை அடைந்துள்ளார். இரண்டாவது தடவையிலேயே எவரஸ்ட் சிகரத்தை அடைந்து யோஹான் பீரிஸ் சாதனை படைத்துள்ளார்.

எவ்வாறாயினும் கடந்த வருடம் உதும்பாலவுடன் யோஹான் பீரிஸ் எவரஸ்ட் சிகரத்தை ஏற முயற்சி செய்திருந்தார். எனினும் அவர் எடுத்து சென்ற ஒட்சிசன் தாங்கியில் கசிவு ஏற்பட்டதனால் அப்போது அவரால் அந்த பயணத்தில் இணைந்து கொள்ள முடியாமல் போனது.

விடா முயற்சியின் பலனாக இரண்டு வருடங்களுக்குப் பின் இன்று தனது சாதனையை யோஹான் பீரிஸ் பதிவுசெய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.