கனடாவில் விமானம் தரையிறங்கிய போது திடீரென வால்பகுதியில் தீப்பிடித்ததால் 5 பேர் காயமடைந்துள்ளனர்.
மொராக்கோ நாட்டில் காசாப்லன்கா நகரில் இருந்து 250 பயணிகளுடன் புறப்பட்ட றொயல் ஏர் மரோக் விமானம் கனடா நாட்டின் மொன்றியல் நகர ட்ருடேயு விமான நிலையத்தில் தரையிறங்கியது.
அப்போது எதிர்பாராவிதமாக விமானத்தின் வால் பகுதியில் பயணிகளின் உடைமைகளை ஏற்றும் சாதனத்தின் பெல்ட் திடீரென தீப்பற்றிக் கொண்டது. இதனால் அதிர்ச்சியடைந்த பயணிகளும், விமான ஊழியர்களும் அவசர அவசரமாக விமானத்திலிருந்து வெளியேறினர்.
அதிர்ஷ்டவசமாக பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது, இருப்பினும் 5 பேர் மட்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த தீவிபத்து குறித்து கனடா போக்குவரத்து பாதுகாப்பு வாரிய அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.