சிம்புவுடன் காதலா : ஆண்ட்ரியா விளக்கம்!!

291

simbuசிம்புவுக்கும், ஆண்ட்ரியாவுக்கும் நெருக்கம் ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் ஹன்சிகா அதிர்ச்சியில் இருப்பதாகவும் செய்திகள் வெளியாயின. சிம்பு, ஹன்சிகா இடையே ஏற்கனவே காதல் மலர்ந்தது. இதனை இருவரும் அதிகாரபூர்வமாக அறிவித்தனர்.

திருமணத்துக்கு சிம்பு அவசரப்படுத்தியதாகவும் ஹன்சிகா ஐந்து வருடம் கழித்தே திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று பிடிவாதமாக மறுத்ததாகவும் கூறப்பட்டது. இதுவே இருவருக்கும் இடையில் கருத்து வேறுபாட்டை உருவாக்கியதாகவும் கிசுகிசுக்கப்பட்டது.

இந்த நிலையில் இங்க என்ன சொல்லுது படத்தில் ஆண்ட்ரியாவும், சிம்புவும் நெருக்கமாக நடித்த படங்கள் இணையத்தில் பரவின. இருவரும் பொருத்தமான ஜோடியாக இருப்பதாக நடிகர் வி.டி.வி.கணேஷ் வர்ணித்தார். சிம்பு, ஆண்ட்ரியாவுக்கு நெருக்கம் ஏற்பட்டுள்ளதாக திரையுலகில் செய்திகள் பரவின.

இதற்கு ஆண்ட்ரியா சார்பில் அவரது செய்தி தொடர்பாளர் மறுப்பு தெரிவித்துள்ளார். அவர் கூறும்போது, இங்க என்ன சொல்லுது படத்தில் சிம்புவும், ஆண்ட்ரியாவும் கவுரவ வேடத்தில் வருகிறார்கள். இருவரும் ஐந்து மணி நேரம் மட்டுமே நடித்தனர்.

இருவருக்கும் தொழில்ரீதியான தொடர்பே உள்ளது. அதை தாண்டி எந்த உறவும் இல்லை. ஆண்ட்ரியா யாரையும் காதலிக்கவில்லை. தனியாகத்தான் இருக்கிறார். நடிப்பில் மட்டுமே கவனம் செலுத்துகிறார் என்றார்.