பன்னிரண்டு வயது சிறுவனை துஷ்பிரயோகம் செய்த பொலிஸ் அதிகாரி!!

526

பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருந்த பன்னிரண்டு வயதுப் சிறுவன் ஒருவனை பொலிஸ் நிலையத்தில் வைத்தே அதிகாரியொருவர் துஷ்பிரயோகம் செய்துள்ளார். இச்சம்பவம் அநுராதபுரம் மாவட்டத்தின் எல்லைக்கிராமமாக மணலாறு பிரதேசத்தில் நடைபெற்றுள்ளது.

கடந்த 08ம் திகதி திருட்டுச் சம்பவமொன்று தொடர்பாக மணலாறு பொலிஸார் 12 வயதுச் சிறுவன் ஒருவனைக் கைது செய்துள்ளனர். அன்றைய இரவில் பொலிஸ் காவலில் வைத்து அதிகாரியொருவர் குறித்த சிறுவனை கடுமையாக துஷ்பிரயோகம் செய்துள்ளார்.

அதன் பின்னரே சிறுவன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நன்னடத்தை இல்லமொன்றுக்கு அனுப்பப்பட்டுள்ளான்.

இந்நிலையில் நன்னடத்தை அதிகாரிகளிடம் சிறுவன் வழங்கிய வாக்குமூலத்தின் பிரகாரம் அவன் மீண்டும் கெபிதிகொல்லாவ நீதவான் நீதிபதி மனோஜ் பிரபாகரன் முன்னிலையில் ஆஜர்செய்யப்பட்டுள்ளான்.

இதன் போது நீதிபதி அளித்த உத்தரவுக்கமைய பாதிக்கப்பட்ட சிறுவனிடம் மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனையில் அவன் கடுமையான துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது.

இதனையடுத்து குறித்த சிறுவன் விவகாரம் தொடர்பாக புதியதொரு விசாரணையை நீதிமன்றத்தின் அறிவுறுத்தலின் பிரகாரம் நன்னடத்தை அதிகாரிகள் ஆரம்பித்துள்ளனர்.