11வது சென்னை சர்வதேச திரைப்பட விழா சென்னையில் டிச.12ம் திகதி ஆரம்பமாகின்றது!!

268

chennaiதமிழ் சினிமாவில் உள்ள பிரபல இயக்குனர்கள், கமராமேன்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் என சுமார் 500க்கும் மேற்பட்டோரை உறுப்பினராகக் கொண்ட இந்தோ சினி அப்ரிசியேஷன் பவுண்டேஷன் அமைப்பு கடந்த 2003ஆம் ஆண்டு முதல் சென்னை சர்வதேச திரைப்பட விழாவை நடத்தி வருகிறது. இந்த விழாவில் சிறந்த தமிழ் படங்களுக்கான விருதுகளும், சிறப்பு நடுவர் விருதுகளும் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டு வரும் டிசம்பர் 12ம் திகதி 11வது சென்னை சர்வதேச திரைப்பட விழா சென்னையில் நடைபெறுகிறது. டிசம்பர் 12ம் திகதி தொடங்கி 19ம் திகதி வரை இந்த திரைப்பட விழா நடைபெறுகிறது. இந்த போட்டியில் பங்கேற்க சிறந்த தமிழ் திரைப்படங்களின் விண்ணப்பங்கள் தற்போது பெறப்பட்டு வருகின்றன.

இப்போட்டியில் பங்கேற்க 2012ம் ஆண்டு அக்டோபர் 16ம் திகதி முதல் 2013ம் ஆண்டு அக்டோபர் 15ம் திகதி வரை தயாரிக்கப்பட்டு சென்சார் செய்யப்பட்ட தமிழ் திரைப்படங்கள் மட்டுமே தகுதி பெற்றவை.