கமலஹாசன் பிறந்த நாள் : நடிகர்–நடிகைகள் வாழ்த்து!!

307

kamalநடிகர் கமலஹாசன் நேற்று தனது 59வது பிறந்த நாளை கொண்டாடினார். நடிகர், நடிகைகள் பலர் நேரிலும் போனிலும் வாழ்த்தினார்கள். பிறந்த நாளையொட்டி நேற்று நள்ளிரவு முக்கியஸ்தர்களுக்கு சென்னையில் உள்ள ஹொட்டல் ஒன்றில் விருந்து கொடுத்தார்.

இதில் நடிகர்கள் ஆர்யா, தனுஷ், இயக்குனர்கள் மணிரத்னம், செல்வமணி, நடிகை சுகாசினி உள்ளிட்ட பலர் பங்கேற்று கமலுக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்தினார்கள்.

நடிகை கவுதமியும் இதில் பங்கேற்றார். பின்னர் கமல் கேக் வெட்டினார். கமலை அர்ஜுன் வாழ்த்தியுள்ளார். அவர் கூறும்போது, இந்திய சினிமாவில் நவீன தொழில் நுட்பங்களை அறிந்து வைத்துள்ள ஒரே நடிகர் கமல். பல்துறைகளில் திறமை வாய்ந்தவர். என்னைப் போன்ற நடிகர்களுக்கு துண்டுதலாக இருக்கிறார். அவருடன் யாரும் போட்டியிட முடியாது. அடுத்த ஐம்பது ஆண்டுகள் அவர் ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்றார்.

நடிகை குஷ்பு கூறும் போது கமல் எனது சிறந்த நண்பர்களில் ஒருவர். அவரை வாழ்த்துகிறேன் என்றார். பிறந்த நாளையொட்டி ஆழ்வார்பேட்டையில் உள்ள அலுவலகத்தில் ஏழைகளுக்கு கமலஹாசன் உதவிகளை வழங்கினார்.

பெண்களுக்கு தையல் எந்திரம், ஊனமுற்றோருக்கு மூன்று சக்கர சைக்கிள், ஏழை மாணவர்களுக்கு கணனிகள் போன்றவைகளை வழங்கினார். கமலஹாசன் ரசிகர்மன்ற பொறுப்பாளர் தங்கவேலு உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.