பிரபல நகைச்சுவை நடிகர் சிட்டிபாபு மரணம்!!

1004

chitti_babuஉடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிட்டிபாபு சிகிச்சை பலனின்றி காலமானார்.

பைவ் ஸ்டார், ஒற்றன், போய்ஸ், தூள், சிவகாசி, திண்டுக்கல் சாரதி, திருவண்ணாமலை, மாப்பிள்ளை உள்பட பல படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்து இருப்பவர் சிட்டிபாபு.

இவருக்கு சர்க்கரை நோய் பாதிப்பு அதிகமானதால், மூளைக்குச் செல்லும் நரம்பில் ரத்தம் உறைந்து, அடைப்பு ஏற்பட்டதால் கோமா நிலையை அடைந்து வென்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

தொடர்ந்து கவலைக்கிடமாகவே இருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலமானார்.