சப்புகஸ்கந்தை எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மூடப்படினும் எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்படாது!!

602

z_pi-Lanka-சப்புகஸ்கந்தை எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் சில நாட்களுக்கு மூட வேண்டி ஏற்படினும் எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்படாது என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

மசகு எண்ணெய் இம்மாதம் 10ம் திகதி நாட்டை வந்தடையும் என்று எதிர்பார்ப்பதாகவும் சிலவேளைகளில் அதில் காலதாமதம் ஏற்படலாம் எனவும் பெற்றோலிய கூட்டுத்தாபனம் சுட்டிக்காட்டியுள்ளது.

இதனால் சில நாட்களுக்கு சப்புகஸ்கந்தை எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மூடப்படவேண்டி ஏற்பட்டாலும் எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது