உலக சாதனையாளர்களில் இரண்டாம் இடத்தில் இருக்கும் தமிழரின் புதிய முயற்சி!!

529

60இற்கும் மேற்பட்ட உலக சாதனைகளை படைத்து, உலக சாதனையாளர்களில் இரண்டாம் இடத்தில் இருக்கும் தமிழரான சுரேஷ் ஜோக்கிம் “உலக சமாதானத்திற்கான மரதன்” என்ற கருப்பொருளில் பல நாடுகளை கடந்து லண்டனை வந்தடைந்துள்ளார்.

கடந்த டிசம்பர் மாதம் கிருஸ்மஸ் தினத்தன்று பெத்லகேமிலிருந்து ஆரம்பித்த அவரது பயணத்தின் தொடர்ச்சி கடந்த 26ஆம் திகதி லண்டனில் இடம்பெற்றுள்ளது.

இதன்மூலம் தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட யுத்த அழிவுகளை உலகின் முன்கொண்டு வரும் வகையிலான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

சுரேஷ் ஜோக்கிம், வறுமை, நோய், யுத்தம் இல்லாத உலகம் எனும் உயரிய நோக்கங்களுக்காக இந்த மரதன் ஓட்டப்போட்டி மூலம் உலகின் கவனத்தினை ஈர்க்க கடும் சவால்கள் மத்தியில் உலகின் 72 நாடுகளில் தன் பயணத்தினை மேற்கொண்டுள்ளார்.

பிரித்தானிய தமிழர் பேரவையின் ஒருங்கிணைப்பில் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தன் பயணத்தை தொடரும் சுரேஷ் அடுத்ததாக அயர்லாந்தில் மரதன் ஓட்டத்தினை நாளை முன்னெடுப்பதோடு பின் தென் அமெரிக்காவின் சிலி (CHILE) நாட்டிலிருந்து அமெரிக்காவின் பல நகரங்களில் பயணித்து இறுதியில் செப்டெம்பரில் கனடாவில் தனது உலகப் பயணத்தை பல்லாயிரம் மக்கள் மத்தியில் முடிவுக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளார்.