தாயிடமிருந்து குழந்தையை பிரித்த அதிசய நீதிமன்றம்!!

477

babyபிரித்தானிய நீதிமன்றம் தாயிடமிருந்து இரட்டை குழந்தைகளை பிரித்து அதிசய தீர்ப்பை வழங்கியுள்ளது. பிரித்தானியாவில் பெத்(29), ஒஸ்திரியாவை சேர்ந்த மருத்துவரான மைக்கல்(33) என்ற தம்பதியினருக்கு இரட்டை குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில் இவர்களுக்குள் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக இருவரும் 8 மாதங்களுக்கு முன்னர் விவாகரத்து பெற்றனர்.

மேலும் இரண்டு குழந்தைகளையும் தந்தையிடம் ஒப்படைத்ததோடு மட்டுமல்லாமல் 15 நாட்களுக்கு ஒரு முறை தனது குழந்தைகளை 20 மணிநேரம் தன்னுடன் வைத்து கொள்ளலாம் என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

இந்த தீர்ப்பானது அந்நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் ஊடகவியலாளர்கள், சமூக சேவகர்கள் போன்றோர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

மேலும் குழந்தைகள் தாயின் பாசப் பராமரிப்பில் வளர வேண்டும் என்ற அடிப்படை உரிமையை அந்நாட்டு நீதிமன்றம் மீறியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.