அறிமுக போட்டியில் 9 விக்கெட் எடுத்து முகமது சமி சாதனை!!

302

mohammed_shamiகொல்கத்தாவில் நடைபெற்ற இந்திய – மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் வேகப்பந்து வீச்சாளர் முகமது சமி சாதனை படைத்துள்ளார்.

கடந்த ஆறாம் திகதி ஆரம்பமான டெஸ்ட் போட்டியில், முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி 234 ஓட்டங்களில் ஆட்டம் இழந்தது. இப்போட்டியின் மூலம் டெஸ்டில் அறிமுகமாகிய வேகப்பந்து வீச்சாளர் முகமது சமி 17 ஓவர்கள் வீசி 71 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

அடுத்து விளையாடிய இந்தியா 453 ஓட்டங்களை குவித்தது. பின்னர் இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி 168 ஓட்டங்களில் சுருண்டது. இதனால் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 51 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இரண்டாவ இன்னிங்சிலும் முகமது சமி 13.1 ஓவர்கள் பந்து வீசி 47 ஓட்டங்களை கொடுத்து 5 விக்கெட்டுகள் வீழ்த்தி வெற்றிக்கு வழிவகுத்தார். இரண்டு இன்னிங்சிலும் முகமது சமி 118 ஓட்டங்களை மட்டும் விட்டுக்கொடுத்து 9 விக்கெட்டுகள் சாய்த்துள்ளார்.

இதன்மூலம் அறிமுக போட்டியிலேயே 9 விக்கெட்டுகள் எடுத்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையை இவர் பெற்றுள்ளார். இதற்கு முன் 1967ம் ஆண்டு அபித் அலி 7 விக்கெட்டும், 2006ம் ஆண்டு முனாப் படேல் 7 விக்கெட்டும் எடுத்ததுதான் சாதனையாக இருந்தது.