இந்திய அணி இன்னிங்ஸ் வித்தியாசத்தில் அபார வெற்றி!!

316

indமேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 51 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்தியா சென்றுள்ள மேற்கிந்திய தீவுகள் அணி 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றது. முதல் போட்டி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்தது.
இதன் முதல் இன்னிங்சில் மேற்கிந்திய தீவுகள் அணி 234 ஓட்டங்களும், இந்திய அணி 453 ஓட்டங்களும் எடுத்தது.

இதில் சதம் கடந்து ரோகித் சர்மா 177 ஓட்டங்களும், அஷ்வின் 123 ஓட்டங்களும் எடுத்தனர்.

இதனையடுத்து 219 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி 54.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 168 ஓட்டங்கள் மட்டுமே எடுத்து இன்னிங்ஸ் மற்றும் 51 ஓட்டங்கள் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்தது.

அதிகபட்சமாக கெய்ல் 33 ஓட்டங்களும், பாவல் 36 ஓட்டங்களும், டேரன் பிராவோ 37 ஓட்டங்களும், சந்தர்போல் 31 ஓட்டங்களும் எடுத்தனர். பந்துவீச்சில் இந்திய அணியின் மொகமது சமி 5 விக்கெட் வீழ்த்தினார்.