வவுனியா வைத்தியசாலை பொதுமக்களுக்கு விடுக்கும் அவசர எச்சரிக்கை!!

498

தென்னிலங்கையில் தற்போது அதிகரித்துக்காணப்படும் இன்புளுவன்சா வைரஸ் காய்ச்சல் தோற்று ஏற்பட்டு பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக இத் தொற்கு சிறுவர்களுக்கும் கற்பிணித்தாய்மார்களுக்கும் ஏற்பட்டு வருகின்றது பரிசோதனையில் கண்டறியப்பட்டுள்ளது.

எனவே வவுனியாவிலுள்ள சிறுவர்கள், கற்பிணித்தாய்மார்கள் மிகவும் அவதானத்துடன் இருக்குமாறு வவுனியா பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் கு.அகிலேந்திரன் தெரிவித்துள்ளார்.

வவுனியா மாவட்டத்தில் இன்புளுவன்சா வைரஸின் தாக்கம் தொடர்பாக கேட்டபோதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கும்போது..

வவுனியாவில் இத்தாக்கம் இன்று வரையில் இனங்காணப்படவில்லை. தென்னிலங்கையில் அதிகரித்துக் காணப்படும் இன்புளுவன்சா வைரசினால் பெருமளவானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

குறிப்பாக சிறுவர்களும் கற்பிணித்தாய்மார்களுக்கும் இத் தொற்று ஏற்பட்டு வருகின்றது. எனவே வவுனியா மாவட்டத்திலுள்ள சிறுவர்கள், கற்பிணித்தாய்மார்கள் மிகவும் அவதானத்துடன், இருப்பதுடன் காய்ச்சல் ஏற்பட்டால் உடனடியாக வைத்தியசாலையை அணுகுமாறும் இதை எதிர்கொள்ள வைத்தியசாலை தயார் நிலையிலுள்ளதாகவும் மேலும் தெரிவித்துள்ளார்.