பாரிய விபத்துக்குள்ளாக இருந்த விமானத்தின் பயணிகளை காப்பற்ற இரு விமானிகளின் புத்திசாலித்தனமே காரணம் என ஸ்ரீலங்கன் விமான சேவையின் ஊடக பேச்சாளர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.
அதிக மழை மற்றும் காற்றுக்கு மத்தியில் நேற்று முன்தினம் இந்தியாவின் கொச்சின் விமான நிலையத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த விமானம் பாரிய விபத்துக்குள்ளாக இருந்து. எனினும் விபத்தை தவிர்த்து பாதுகாப்பாக தரையிறக்குவதற்கு அதன் விமானிகள் துரிதமாக செயற்பட்டதாக ஊடக பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான யு.எல்.167 என்ற விமானம் புறப்பட தயாரான போது, விமான நிலைய பகுதிகளில் கடுமையான காற்று மற்றும் மழையுடனான காலநிலை நிலவியது.
இதன்போது அந்த விமானத்தில் 228 பயணிகள் மற்றும் 12 ஊழியர்கள் பயணித்துள்ளனர். இந்த விமான பிரான்ஸில் தயாரிக்கப்பட்ட A-330 ரக விமானமாகும்.
இவ்வாறான சீரற்ற காலநிலையின் கீழ் திடீரென பின்பக்கம் பாரமாகி வழுக்கிய விமானத்தின் சக்கரம் ஓடுதளத்தின் எல்லையில் இருக்கும் விளக்குகளில் மோதியுள்ளது. இதனால் மின்சார விளக்குகளுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளது.
எனினும் ஆபத்தான நேரத்திலும், விமானத்தை கட்டுப்படுத்தி பயணிகளுக்கு எவ்வித ஆபத்தும் ஏற்படாத வகையில் விமானத்தை தரையிறக்குவதற்கு விமானிகள் நடவடிக்கை மேற்கொண்டனர் என ஸ்ரீலங்கன் நிறுவனத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கன் விமான சேவையின் பொறியியலார்கள் சிலர் கொச்சின் விமான நிலையத்திற்கு சென்றனர். விமானத்தின் நிலைமைகள் தொடர்பில் ஆய்வுகளை மேற்கொண்டுள்ளதாக ஊடக பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.





