சிங்கப்பூர் பிரதமரின் இணையத்தளத்தின் மீது தாக்குதல்!!

918

tonlyசிங்கப்பூர் பிரதமரின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தின் மீது ஊடுறுவல் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இனந்தெரியாத குழு ஒன்று இணையத்தளத்தில் உள்ள தகவல்களில் மாற்றங்களை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எனினும் இணையத்தளத்தின் செயற்பாடுகள் பாதிக்கப்படவில்லை என சிங்கப்பூர் பிரதமர் லீ ஹசின் லூங்கின் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.

இது தொடர்பான விசாரணைகளை சிங்கப்பூர் அதிகாரிகள் மேற்கொண்டுவருகின்றனர்.