குண்டான இளைஞன் விமானத்தில் ஏற அனுமதி மறுப்பு : தவிக்கும் குடும்பம்!!

318

kunduஹார்மோன் பிரச்சினையால் உடல் பருமனான நோயாளியை விமானத்தில் ஏற்ற முடியாது என பிரிட்டிஷ் விமான நிறுவனம் மறுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன்னால் மருத்துவக் காரணங்களுக்காக பிரான்ஸ் நாட்டிலிருந்து கெவின் செனைஸ் என்ற இளைஞனும் அவனது பெற்றோரும் அமெரிக்கா வந்தனர்.

மேயோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கெவின், சிகிச்சை முடிந்ததும் தனது பெற்றோருடன் தங்கள் நாட்டிற்கு திரும்பிச் செல்வதற்காக பிரிட்டிஷ் விமான நிறுவனத்தில் முன்பதிவு செய்திருந்தனர்.

இந்நிலையில் 20 வயதான கெவினுக்கு உடலில் ஏற்பட்ட ஹார்மோன் கோளாறால் உடல் எடை கூடியது.
அதன் விளைவாக கெவினின் எடை 500 பவுண்டானதால் விமான பயணத்திற்கு பிரிட்டிஷ் விமான நிறுவனம் அனுமதி மறுத்துள்ளது.

மேலும் கெவினுக்கு எந்த நேரமும் மருத்துவ உதவியும், பிராணவாயுக் கருவியும் தேவைப்படும் என்பதால் பயணம் செய்யும்போது ஏதாவது பிரச்சினைகள் ஏற்பட்டால் சமாளிக்க முடியாது என காரணம் தெரிவித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து ஒரு வாரம் ஹோட்டலில் தங்கியிருந்த கெவினின் குடும்பம் மேற்கொண்டு செலவு செய்வதற்கு இயலாமல் ரயில் மூலம் நியூயோர்க் சென்று அங்கிருந்து கப்பல் மூலமாக பிரான்ஸ் செல்ல முடிவெடுத்துள்ளனர்.