மட்டக்களப்பை உலுக்கிய தற்கொலைகள் : முன்னனுக்குபின் முரணான தகவல்கள்!!

501

மட்டக்களப்பு – ஏறாவூர் மற்றும் கரடியனாறு ஆகிய இரு பொலிஸ் பிரிவுகளிலும் கடந்த ஞாயிற்றுக்கிழமை யுவதிகள் இருவரின் சடலங்களை மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள குமாரவேலியார் கிராமத்தைச் சேர்ந்த கஜேந்திரன் நிஸாந்தினி (வயது 19) என்பவரின் சடலம் அவரது வீட்டிலிருந்து மீட்கப்பட்டது.

தாயின் கண்டிப்பை பொறுத்துக்கொள்ளாமல் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன, எனினும் காதல் விவகாரமாக இருக்கலாம் எனவும் இன்னொரு தகவல் தெரிவிக்கின்றது

இதேவேளை மட்டக்களப்பு – பதுளை வீதி கரடியனாறு பொலிஸ் பிரிவிலுள்ள கனித்தீவு கிராமத்தைச் சேர்ந்த சௌந்தரராஜன் வினோதினி (வயது 19) என்பவரின் சடலமும் அவரது மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தான் விரும்பியிருந்த காதலனின் பெற்றோரிடம், தன்னைப்பற்றி பிறர் மோசமாக கதைகட்டி சொல்லிக்கொடுத்ததால், தன்னோடு பேசுவதை அவர் நிறுத்தியதால் மனஉளைச்சலுக்குள்ளாகி “அலரி விதை “உட்கொண்டு தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது

மேலும் இவ்விரு சம்பவங்களும் ஒன்றுடன் ஒன்று தொடர்பட்டதா என்றும் நுன்கடனால் பல பெண்கள் உயிரை மாய்த்துக்கொள்ளும் நிலையில் இவ்விடயம் தொடர்பில் விரிவான விசாரணைகளில் பொலிஸார் ஈடுபட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.