அதர்வா படத்திலிருந்து லட்சுமிராய் நீக்கம்!!

332

laxபரதேசி படத்தை அடுத்து நடிகர் முரளியின் மகன் அதர்வா நடிக்கும் புதிய படம் இரும்புக்குதிரை. இப்படத்தில் இவருக்கு ஜோடியாக ப்ரியா ஆனந்த் நடிக்கிறார். இன்னொரு நடிகையாக லட்சுமிராய் ஒப்பந்தமாகியிருந்தார். இப்படத்தை அறிமுக இயக்குனர் யுவராஜ் இயக்குகிறார்.

இப்படத்தில் லட்சுமிராய் பைக் சாகச வீராங்கனையாக நடிப்பதாக இருந்தது. இதற்காக, கடந்த சில நாட்களாக பைக் ஓட்டும் பயிற்சியும் எடுத்து வந்தார். இப்படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் வேளையில், படப்பிடிப்பில் கலந்து கொள்ள இதுவரை லட்சுமிராய்க்கு அழைப்பு வரவே இல்லையாம்.

இதுகுறித்து படக்குழுவினரிடம் கேட்டால் லட்சுமிராய் இந்த படத்தில் நடிக்கவில்லை என்று கூறுகின்றனர். லட்சுமிராயிடம் கேட்டால், முதலில் அதிர்ச்சியடைந்த அவர் இதுகுறித்து தனக்கு எந்த தகவலும் வரவில்லை என்று தெரிவித்துள்ளார்.