வன்னி விளான்குளம் பகுதியில் வாகன விபத்து : இளைஞர் ஒருவர் பரிதாபமாக பலி!!

616

வன்னி விளான்குளம் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த விபத்து நேற்று இடம்பெற்றுள்ளது.

மல்லாவியில் இருந்து மாங்குளம் நோக்கி மோட்டார் சைக்கிளில் மூன்று இளைஞர்கள் பயணித்துள்ளனர். இதன்போது வன்னி விளான்குளம் வீதி வளைவில் பாலத்துடன் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் சம்பவ இடத்திலேயே இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்

20 வயதான முருகன் நளின் என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் காயமடைந்த மேலும் இருவர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மாங்குளம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.