தமிழகத்தில் அதிக கவனம் பெற்ற மணப்பெண்ணின் 10 கட்டளைகள்!!

448

தமிழகத்தில் எட்வின் என்பவருக்கும் பெனிலா என்ற பெண்ணிற்கும் திருமணம் நடக்கவிருக்கிறது. இந்த திருமணத்தில் மணப்பெண்ணின் பத்து கட்டளைகள் தான் முக்கியத்துவம்பெற்றுள்ளன.இதற்கு மணமகனும் சம்மதம் தெரிவித்துள்ளார்.

திருமண பேனரில் வைக்கப்பட்டுள்ள மணப்பெண்ணின் பத்து கட்டளைகள் தமிழகத்தில் அதிகம் கவனம் பெற்றுள்ளது.

1.உன்னுடைய மனைவி நானாகிறேன், மற்றொரு காதலி உனக்கு இருக்க கூடாது, 2. கண்டவரின் மனைவியை பார்த்து சிரிக்க கூடாது. அவளுடைய அழகை குறித்து வர்ணிக்க கூடாது. 3. இரவு 8.30 மணிக்கு கிச்சன் க்ளோஸ்,
4. இரவு 9.30 மணிக்கு பெட்ரூம் க்ளோஸ் க்ளோஸ், 5. தேங்காய் எண்ணை. ஷாம்பு, சோப்பு துண்டு சொந்தமாய் எடுத்துக்கொண்டு போய் குளிக்க வேண்டும். அதற்காக தொந்தரவு செய்யக்கூடாது,

6.ஹோட்டல் சாப்பாட்டை நிறுத்தி பழைய சாப்பாடானாலும் வீட்டில் சாப்பிட வேண்டும், 7.தண்ணி அடித்தால் வீட்டிற்கு வெளியே படுத்துக்கொள்ள வேண்டும், 8.சாயங்காலம் 6.30 முதல் 9.30 வரை சீரியல் டைம், கூப்பிட்டு தொந்தரவு செய்யக்கூடாது. பச்ச தண்ணி கூட கிடையாது, 9. உறக்கத்தில் குறட்டை விடவோ, சத்தம் போடவோ கூடாது, 10.மாமியாரின் செயல்பாடுகளுக்கு எவ்வித தயவு தாட்சண்யம் பார்க்காமல் பதிலடி கொடுக்கப்படும்.என்று இடம்பெற்றுள்ளது.