மனைவியை காதலனுக்கு திருமணம் செய்து வைத்த கணவன் : சுவாரசிய சம்பவம்!!

392

இந்தியாவில் திருமணமான சில மாதங்களிலேயே மனைவியை காதலுடன் சேர்த்து வைத்த சுவாரசிய சம்பவம் நடந்துள்ளது.

கான்பூர் அருகே சானிக்வன் கிராமத்தை சேர்ந்தவர் சுஜித் என்ற கோலு, இவருக்கும் ஷ்யாம்நகர் பகுதியை சேர்ந்த சாந்தி என்பவருக்கும் கடந்த பிப்ரவரியில் திருமணம் நடந்தது.

அடுத்த சில நாட்களில், தாய் வீட்டுக்கு சென்று வருவதாக கூறிச்சென்ற சாந்தி வரவேயில்லை.

இதனால் கோபமடைந்த சுஜித், சாந்தியின் தாய் வீட்டுக்கு சென்று கேட்க ப்ளாஷ்பேக்கை கூறியிருக்கிறார்.

அதாவது, லக்னோவை சேர்ந்த இளைஞர் ரவி என்பவரை காதலித்ததாகவும், பெற்றோர் கட்டாயப்படுத்தி உங்களுக்கு கல்யாணம் செய்து வைத்துவிட்டனர் என கூறியுள்ளார்.

இதை கேட்டதும் நான் பார்த்துக் கொள்கிறேன் என கூறிய சுஜித், ரவியிடம் பேசி சம்மதம் வாங்கியுள்ளார்.

அடுத்ததாக சாந்தியின் வீட்டில் சம்மதம் தெரிவிக்காத நிலையில், ஊர் பெரியவர்களிடம் பேசியுள்ளார்.

இதனை தொடர்ந்து பொலிசின் அனுமதியுடன் சானிக்வன் பகுதியில் உள்ள ஹனுமன் கோவிலில் வைத்து திருமணமும் செய்து வைத்துள்ளார்.

நண்பர்கள், உறவினர்கள் முன்னிலையில் திருமணம் நடந்த நிலையில், முதலில் தான் கோபப்பட்டதாகவும், நிதானமாக யோசித்த பின்னர் தான் தெளிவான முடிவு எடுத்ததாகவும் சுஜித் தெரிவித்துள்ளார்.