இளம் மனைவியை கழுத்தை நெரித்து கொன்றது ஏன்? கணவர் பரபரப்பு வாக்குமூலம்!!

307

இந்தியாவில் மனைவிக்கு வேறு ஒருவருடன் தொடர்பு இருப்பதாக எண்ணி அவரை ஆத்திரத்தில் கொலை செய்ததாக கணவர் பொலிசில் வாக்குமூலம் அளித்துள்ளார்.

உத்தரபிரதேச மாநிலத்தின் கிரேட்டர் நொய்டாவை சேர்ந்தவர் ஆகுயில் (26). இவர் மனைவி இக்ரா.

கடந்த செவ்வாய்க்கிழமை கணவன் மனைவி இடையே திடீரென சண்டை ஏற்பட்ட நிலையில் ஆத்திரத்தில் ஆகுயில், இக்ராவின் கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு வீட்டிலிருந்து தப்பியோடியுள்ளார்.

பின்னர் சம்பவம் குறித்து அக்கம்பக்கத்தினர் பொலிசாருக்கு தகவல் கொடுத்த நிலையில் சடலத்தை கைப்பற்றிய பொலிசார் தலைமறைவாக இருந்த ஆகுயிலை நேற்று கைது செய்தனர்.

அவர் பொலிசாரிடம் அளித்துள்ள வாக்குமூலத்தில், எங்களுக்கு திருமணமாகி மூன்றாண்டுகள் ஆகிறது.

கடந்த சில மாதங்களாக இக்ராவுக்கு வேறு நபருடன் தொடர்பு இருப்பதாக எனக்கு சந்தேகம் ஏற்பட்ட நிலையில் இது தொடர்பாக அடிக்கடி எங்களுக்குள் சண்டை ஏற்பட்டது.

செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட சண்டையில் ஆத்திரமடைந்த நான் அவரை கொலை செய்துவிட்டேன் என கூறியுள்ளார்.

இதனிடையில் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி இக்ராவை ஆகுயில் கொன்றுவிட்டதாக இக்ரா குடும்பத்தார் குற்றஞ்சாட்டியுள்ளனர். பொலிசார் இது குறித்தும் விசாரித்து வருகிறார்கள்.