பெண்ணின் ஆடை வேன் கதவில் சிக்கி துடிதுடித்து இறந்த பரிதாபம்!!

329

கேரளாவில் மரண வீட்டுக்கு சென்ற பெண்ணொருவரின் துப்பட்டா வேன் கதவில் சிக்கிய நிலையில் துடிதுடித்து உயிரிழந்துள்ளார்.

நெய்யாற்றின் கரையை அடுத்த உதயன்குளங்கரையை சேர்ந்தவர் ரவி (45) இவர் மனைவி மஞ்சு (40). இவர்களுக்கு கடந்த 15 ஆண்டுகளாக குழந்தை இல்லாமல் இருந்த நிலையில் தற்போது ஒரு ஆண் குழந்தை உள்ளது.

சம்பவத்தன்று காலையில் மஞ்சு திற்பரப்பு பகுதியை சேர்ந்த உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சிக்கு சென்றிருந்தார். பின்னர், தனது தாயார் வீட்டிற்கு செல்வதற்காக மஞ்சு வேனில் ஏறினார்.

வேனானது அவர் தாய் வீட்டுக்கு வந்து நின்ற நிலையில் அதிலிருந்து மஞ்சு கீழே இறங்கினார். அப்போது, அவர் அணிந்திருந்த துப்பட்டா வேன் கதவில் சிக்கிக்கொண்ட நிலையில் அதை அவர் எடுக்க முயன்றார்.

ஆனால் அதற்குள் வேன் திடீரென கிளம்பிய நிலையில் நிலைதடுமாறி கீழே விழுந்த மஞ்சுவுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

வலியால் துடித்த அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் அவர் வழியிலேயே இறந்துவிட்டதை மருத்துவர்கள் உறுதி செய்தனர்.

சம்பவம் குறித்து பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.