கொழும்பில் நோர்வே பெண்ணுக்கு நேர்ந்த கதி!!

483

கொழும்பில் இருந்து மாத்தறை நோக்கி ரயிலில் பயணித்த நோர்வே நாட்டு பெண்ணின் பணப்பை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

குறித்த ரயிலில் பயணித்த நபர் ஒருவரினால், பணம் மற்றும் பொருட்கள் உள்ளடங்கிய தனது பணப்பை கொள்ளையடிக்கப்பட்டதாக நோர்வே நாட்டு பெண், பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

ஜெக்லீன் கீனத் என்ற நோர்வே நாட்டு பெண்ணுக்கு சொந்தமான பையில் பணம், வெளிநாட்டு கடவுச்சீட்டு, கையடக்க தொலைபேசி உட்பட பொருட்கள் உள்ளதாக அம்பலாங்கொட பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

கொழும்பில் இருந்து மாத்தறை நோக்கி பயணித்த ரயில் அம்பலாங்கொட ரயில் நிலையத்தில் நிறுத்தி விட்டு மீண்டும் பயணத்தை ஆரம்பித்த சில நொடிகளில், குறித்த நபர் பெண்ணின் பையை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றுள்ளதாக முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பொலிஸார் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.