குடிபோதையில் பெற்ற மகளை அடித்து கொன்ற கொடூர தந்தை!!

369

குடிபோதையில் ஏற்பட்ட ஆத்திரம் தீர பெற்ற மகளை சாகும் வரை தந்தையே அடித்துக்கொன்ற சம்பவம் இந்தியளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திராவின் அனந்த்பூர் மாவட்டத்தில் உள்ள வஜ்ரா கரூர் என்ற கிராமத்தில் வசித்து வருபவர் யெர்ரிசாமி. கூலித் தொழிலாளியான இவருக்கு உமாதேவி என்ற மனைவியும் இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகனும் உள்ளனர்.

யெர்ரிசாமியின் மூத்த மகளான சுமித்ரா (7) பிறவியிலேயே உடல் சாவலுடன் பிறந்தார். மேலும் அவரது இரண்டாவது மகன் யஷ்வந்தும் மாற்றுத்திறனாளி குழந்தையாக உள்ளார்.

இதனால் மிகவும் மனவேதனை அடைந்த யெர்ரிசாமி, தினமும் இரவு குடிவிட்டு வீட்டிற்கு வந்து மனைவி உமாதேவி மற்றும் குழந்தைகளை சராமாரியாக அடித்து உதைப்பார். சம்பவம் நடந்த நேற்றிரவும் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார் யெர்ரிசாமி.

வீட்டிக்குள் நுழைந்த உடன் மூத்த மகள் சுமித்ராவை அடிக்க அவர் தொடங்கியுள்ளார். இதை மனைவி உமாதேவி தடுத்தார். தொடர்ந்து யெர்ரிசாமி மகள் சுமித்ரா மற்றும் மகன் யஷ்வந்தை தூக்கி வந்து, தரையில் கால் ஊன்றி நடக்க வைத்துள்ளார்.

ஆனால் அந்த குழந்தைகளால் நடக்க முடியவில்லை. யெர்ரிசாமி தரையில் நிற்க வைத்த உடன், குழந்தைகள் தடாலன விழுந்தன. இதை அவர் தொடர்ந்து செய்து கொண்டிருக்க, இரண்டு குழந்தைகளாலும் நடக்க முடியவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த யெர்ரிசாமி, குழந்தைகள் இருவரையும் சராமாரியாக அடிக்க துவங்கிவிட்டார். வீட்டின் அழுக்குரல்கள் ஓங்கி ஒலித்தன. ஆனால் அவர் குழந்தைகளையும், மனைவியையும் தாக்குவதை நிறுத்தவில்லை.

மகள் சுமித்ராவை மீண்டும் எழுப்பி நடக்கவைக்க முயல்கையில், அவள் விழுந்தாள். இதனால் ஆத்திரமடைந்த யெர்ரிசாமி குழந்தை சுமித்ராவின் தலையை பிடித்து சுவற்றில் ஓங்கி முட்டியுள்ளார். மீண்டும் குச்சியால் மகளை அடிக்கத் தொடங்கினார்.

அடித்தாங்காமல் அழுத சுமித்ரா, சிறிதுநேரத்திற்கு பிறகு நினைவிழந்து தரையில் மயங்கி விழுந்தாள். ஆனால் அதை கண்டுக்கொள்ளாமல், ஆத்திரத்துடன் வீட்டின் கதவை சாத்திவிட்டார் யெர்ரிசாமி. குழந்தை சுமித்ராவிற்கு ஆபத்தான காயங்கள் ஏற்பட்ட நிலையில், அவள் உயிரழந்தாள்.

காயமடைந்த குழந்தை உயிரழந்த சம்பவம் அப்பகுதி முழுவதும் சீற்றத்தை தூண்டியது. இதனால் அதிர்ச்சியடைந்த மக்கள் உமாதேவியை அழைத்துக்கொண்டு உள்ளூர் காவல்நிலையத்திற்கு சென்றனர். இந்த சம்பவத்தை குறித்து வழக்கு பதிந்த காவல்துறை, உடனடியாக யெர்ரிசாமியை கைது செய்தனர். மேலும் காயமடைந்த மற்ற குழந்தைகள் மற்றும் தாய் உமாதேவிக்கு உரிய சிகிச்சை அளிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.