இந்திய அணியை அஸ்வின் வழிநடத்துவார் : கவாஸ்கர் நம்பிக்கை!!

321

ashwinமேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் தமிழக சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் முதல் இன்னிங்சில் 52 ஓட்டங்கள் விட்டு கொடுத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்தார்.

துடுப்பாட்டத்திலும் தனது திறமையை நிரூபித்தார். 5 விக்கெட் இழப்பிற்கு 89 ஓட்டங்கள் என்ற நிலையில் தடுமாறிய இந்திய அணியை அஸ்வினும், ரோஹித்தும் சேர்ந்து மீட்டனர்.
ரோஹித்துடன் இணைந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அஸ்வின் 92 ஓட்டங்கள் எடுத்து களத்தில் இருந்தார்.

இதுகுறித்து முன்னாள் அணித்தலைவர் சுனில் கவாஸ்கர் கூறுகையில், அஸ்வினும், ரோஹித்தும் சேர்ந்து 198 ஓட்டங்கள் குவித்தனர். இது இந்திய அணிக்கு வலுசேர்த்துள்ளது.

அவரது முதல் சதமும் மேற்கிந்திய தீவுகளுடனான இதே போன்ற சூழ்நிலையில் தான் அமைந்தது. அவர் நெருக்கடிகளை சுலபமாக சமாளிக்கிறார், பந்துவீச்சுக்கு கொடுக்கும் அக்கறையை துடுப்பாட்டத்திலும் காட்டுகிறார்.

தீவிரமாக பயிற்சி எடுப்பது மட்டுமல்லாமல் ஒவ்வொரு நாளும் தனது திறமையை வளர்த்து வருகிறார். ஒருநாள் நிச்சயம் இந்திய அணியை வழிநடத்துவார் என தெரிவித்துள்ளார்.