வெற்றியை பறிகொடுத்து விட்டோம் : டிரன் சமி!!

296

West Indies captain Darren Sammy speaks during a Cricket World Cup news conference in Colomboடெஸ்ட் போட்டிகளில் போராடி நல்ல சாதகமான நிலையை பெற்ற பிறகு, அதை வீணடிப்பது வாடிக்கையான ஒன்றாக மாறிவிட்டது என மேற்கிந்திய தீவுகள் அணியின் அணித்தலைவர் சமி தெரிவித்துள்ளார்.

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 51 ஓட்டங்கள் வித்தியாசத்தில் மேற்கிந்திய தீவுகள் தோல்வி அடைந்தது.

இதுகுறித்து மேற்கிந்திய தீவுகள் அணியின் அணித்தலைவர் சமி கூறுகையில், டெஸ்ட் போட்டிகளில் நல்ல சாதகமான நிலையை போராடி பெற்ற பிறகு அதை வீணடிப்பது எங்களுக்கு வாடிக்கையாகிவிட்டது.

இந்தியா துடுப்பெடுத்தாடும் போது, தொடக்கத்தில் விக்கெட்டுகளைக் கைப்பற்றி கடும் நெருக்கடி கொடுத்தோம்.
ஆனால் அதன் பிறகு பெரிய இணைப்பாட்டம் அமைய வாய்ப்பு கொடுத்தது தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்துவிட்டது.

60 , 70 ஓவர்களில் அல்ல வீரர்களையும் ஆட்டமிழக்க செய்வது எந்த வகையிலும் வெற்றிக்கு உதவாது. குறைந்தபட்சம் 120 ஓவர் வரை தாக்குப்பிடிக்க வேண்டும் என நினைத்தோம், அது நடக்கவில்லை.

ஷில்லிங்போட் அபாரமாகப் பந்துவீசினார், தொடர்ச்சியாக 50 ஓவர் போடுவது என்பது சாதாரண காரியம் இல்லை. நான் உட்பட மற்ற பந்துவீச்சாளர்களும் அவருக்கு போதிய ஒத்துழைப்பு கொடுப்பது அவசியம்.

அடுத்து மும்பை டெஸ்ட் போட்டியில் சிறப்பாக விளையாட முயற்சிப்போம் என்று தெரிவித்துள்ளார்.