திருமண நாளில் நடந்த சோகம் : காதல் மனைவியை கொன்ற கணவன்!!

560

சென்னையில் முதல் திருமண நாளன்று காதல் மனைவியை குத்திக் கொன்று விட்டு கணவனும் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் நடந்துள்ளது.

ஆவடி அருகே பட்டாபிராமம் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன், இவரது மனைவி மதுமிதா. இவர்கள் கடந்தாண்டு யூன் மாதம் 1ம் திகதி பெற்றோர்கள் சம்மதத்துடன் காதல் திருமணம் செய்து கொண்டனர்.

மதுமிதா தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்த நிலையில், வெங்கடேசன் வேலை இல்லாமல் இருந்துள்ளார். இதனால் இருவருக்கும் கருத்து வேறுபாடு இருந்துள்ளது, நேற்றைய தினம் திருமண நாளின் போது இதேபோன்று வாய்த்தகராறு முற்றிய நிலையில், கோபத்தில் வெங்கடேசன் மதுமிதாவை குத்திக் கொன்றுள்ளார்.

மனைவியை கொன்று விட்ட பயத்தில் தற்கொலைக்கு முயன்றுள்ளார், வலி தாங்க முடியாமல் வெங்கடேசன் கதறித்துடிக்க விரைந்து வந்த அக்கம்பக்கத்தினர் இருவரையும் மீட்டுள்ளனர்.

இதனை தொடர்ந்து பட்டாபிராமம் பொலிசார் இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

வழியிலேயே மதுமிதா உயிரிழந்த நிலையில், வெங்கடேசனுக்கு சிகிச்சை நடந்து வருகிறது, தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.