வவுனியாவில் டெலோ கிறிஸ்டி குகராஜாவின் நினைவுத்தூபி மீது கல்வீச்சு!!

641

வவுனியா தமிழீழ விடுதலை இயக்கத்தின் மாவட்ட பொறுப்பாளர் கிறிஸ்டி குகராஜாவின் நினைவுத்தூபி மீது கல்வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

வவுனியா வைரவப்புளியங்குளம் யங்ஸ்ரார் மைதானத்திற்கு அருகே அமைந்துள்ள தமிழீழ விடுதலை இயக்கத்தின் வவுனியா மாவட்ட பொறுப்பாளரும் மத்திய குழு உறுப்பினருமாக கிறிஸ்டி குகராஜா (குகன்) நினைவுதூபியின் மீது இன்று(02.06 மதியம் இனந்தெரியாத நபர்கள் கல்வீச்சு தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.

அவ்விடத்தில் பரவலாக கற்கள் காணப்படுவதுடன் இக் கல்வீச்சு தாக்குதலில் நினைவுத்தூபியின் கண்ணாடி பகுதியளவில் சேதமடைந்துள்ளன.

கடந்த 2013 ம் ஆண்டு மாகாண சபை தேர்தல் நேரமும் இந் நினைவுத்தூபி சேதமாக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.