மரதன் போட்டியில் சாதித்த முதியவர் மரணம்!!

462

marathanஅமெரிக்காவில் நடந்த மரதன் போட்டியில் பங்கேற்ற முதியவர் மரணம் அடைந்தார். அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள சான் ஜோஸ் பகுதியைச் சேர்ந்தவர் ஜோய் ஜோன்சன்(86).

அமெரிக்காவின் ஐந்து நகரங்களை இணைக்கும் 26.2 மைல் தூரத்திற்கான மரதன் ஓட்டப் பந்தயம், நியூயோர்க் நகரத்தில் இம்மாதம் 3ம் திகதி நடந்தது.

இந்தப் பந்தயத்தில் பங்கேற்ற, ஜோய் பந்தய தூரத்தை ஓடி முடித்தபின் மருத்துவ மையத்திற்கு சென்றார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு செல்லுமாறு கூறினர்.

இதனையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜோய் பரிதாபமாக உயிரிழந்தார். கடந்த 1991ல் முதன் முறையாக மரதன் போட்டியில் கலந்து கொண்டவர், 4 மணி நேரத்தில் பந்தய தூரத்தைக் கடந்தார்.

இதுவரை 25 முறை பந்தயத்தில் கலந்து கொண்ட ஜோய் ஆறு முறை முதலிடத்தைப் பிடித்துள்ளார்.