வவுனியா கூமாங்குளத்தில் வீடு புகுந்து வாள்வெட்டுத் தாக்குதல் : ஒருவர் வைத்தியசாலையில்!!

582

வவுனியா கூமாங்குளம் பிள்ளையார் கோவில் வீதியில் அமைந்துள்ள வீடொன்றில் நேற்று (02.06.2018) இரவு 9 மணியளவில் வாள்வெட்டுத் தாக்குதலில் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன் மோட்டார் சைக்கில் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.

வவுனியா கூமாங்குளம் பிள்ளையார் வீதியுள்ள வீடொன்றில் இரவு 9 மணியளவில் மகேந்திரா கப்ரக வாகனத்தில் வந்த 15க்கு மேற்பட்ட இனந்தெரியாத நபர்கள் வீட்டு வளாகத்திற்குள் சென்று அங்கு நின்ற 32 வயதுடைய இளைஞன் மீது வாள்வெட்டு தாக்குதல் மேற்கொண்டதுடன் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிலினை தீயிட்டு கொழுத்தி வீட்டின் யன்னல் கண்ணாடி மீது தாக்குதல் மேற்கொண்டு வீட்டின் கதவினையுடைத்து சுமார் 7லட்சம் பெறுமதியான பணத்தினை கொள்ளையடித்துச் தப்பித்துச் சென்றுள்ளனர்.

இதன் போது வீட்டினுள் யன்னல் அருகில் உறங்கிக்கொண்டிருந்த 2 மாத கைக்குழந்தை தயார் கட்டிப்பிடித்து காப்பாற்றியுள்ளனர். அத்துடன் காயமடைந்த குறித்த இளைஞன் சிகிச்சைக்காக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.