புலம்பெயர் தேசங்களில் தடை செய்யப்படும் ரஜினியின் காலா : அதிர்ச்சியில் படக் குழு!!

382

புலம்பெயர் தமிழர்கள் வசிக்கும் நாடுகளில் ரஜினியின் காலா திரைப்படம் திரையிடப்படாது என்ற உறுதி மொழியினை திரையரங்க உரிமையாளர்கள் வழங்கியுள்ளனர்.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய அம்மாவட்ட மக்கள் நூறாவது நாளாக அடித்து விரட்டப்பட்டனர். நூறாவது நாள் வன்முறை வெடித்ததனால் அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த தாக்குதலின் போது, 13இற்கும் மேற்பட்டவர்கள் படுகொலை செய்யப்பட்டனர். இந்நிலையில் மாநில அரசாங்கத்திற்கு அழுத்தங்கள் அதிகரித்தது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி “சமூக விரோதிகள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் காவல்துறையினர் நடவடிக்கை எடுத்தனர்.” என்றார்.

இந்நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்னர் தூத்துக்குடிக்குச் சென்ற ரஜினி அங்கு பாதிக்கப்பட்டவர்களை பார்வையிட்டதுடன், அவர்களுக்கான நிவாரண உதவினையும் வழங்கியிருந்தார்.

இதன்பின்னர் சென்னை திரும்பிய அவர், விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, பேசிய ரஜினி, இந்தப் போராட்டத்தில் சமூக விரோதிகள் புகுந்து செயற்பட்டனர். இதனால் தான் பொலிஸார் பொதுமக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். எதற்கு எடுத்தாலும் போராட்டம், போராட்டம் என்று இருந்தால் தமிழ் நாடு சுடுகாடாக மாறும் என்று மிகக் கடுமையாக பேசியிருந்தார்.

இது தமிழகம் எங்கும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. சமூக வலைத்தளங்களில் ரஜினியின் இந்தக் கருத்துக்கு கண்டனங்கள் எழுந்தன.

இதனையடுத்து புலம்பெயர் தமிழ் மக்கள் வாழும் பெரும்பாலான நாடுகளில் உள்ள திரையரங்குகளில் காலா திரைப்படம் வெளியிடக் கூடாது என்றும். மக்களின் போராட்டத்தை கொச்சைப்படுத்திய ரஜினியின் செயற்பாடு ஏற்புடையதல்ல என்று அழுத்தங்கள் வலுத்தன.

இந்நிலையில் சுவிஸ் வாழ் தமிழ் மக்களின் வேண்டுகோளுக்கு இணங்க அந்நாட்டில் காலா திரைப்படம் திரையிடப்படமாட்டாது என திரையரங்க உரிமையாளர்கள் உறுதியளித்துள்ளனர்.

அதேபோன்று பல கோடிகளைக் கொடுத்து படத்தை கொள்வனவு செய்யும் பட விநியோகஸ்தர்களும் தமிழ் மக்களின் வேண்டுகோள்களுக்கு மதிப்பளித்து படத்தை கொள்வனவு செய்யமாட்டோம் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

ஏற்கனவே கர்நாடக மாநிலத்தில் ரஜினியின் திரைப்படம் திரையிடப்படுவதற்கு எதிர்ப்புக்கள் வெளியாகியுள்ள நிலையில் புலம்பெயர் நாடுகளிலும் தடை குறித்து வரும் செய்தியினால் படக்குழுவினர் அதிர்ச்சியில் இருக்கின்றனர்.