இந்தியாவிற்கு போகின்றீர்களா முக்கியமாக அஸ்ஸாம் பக்கம் போகாதீர்கள், இளம் பெண்கள் கட்டாயம் போக வேண்டாம் என அமெரிக்க இணையத்தளத்தில் தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் பிரபல செய்தி இணையம் நஷனல் ரிப்போர்ட்.நெட். இது சமீபத்தில் ஒரு செய்தியை வெளியிட்டுள்ளது. இந்தியாவில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று உங்களுக்கு தெரிந்தது தான்.
அதிலும் நவம்பர் 3ம் திகதியில் இருந்து ஒரு வாரம் அஸ்ஸாம் மாநிலத்தில் ‘பாலியல் பலாத்கார விழா’ கொண்டாடப்படுகிறது.
அதனால் பெண்கள் பலரும் பாதுகாப்பான இடத்துக்கு ஓடிக்கொண்டிருக்கின்றனர். அந்த மாநிலத்துக்கு நீங்கள் யாரும் போக வேண்டாம் என செய்தி ஒன்றை வெளியிட்டது.
இதனை உண்மை என நம்பியவர்கள் பேஸ்புக் மூலம் தகவலை பரிமாறிக் கொண்டனர். ட்விட்டரிலும் சில ஆயிரம் பேர் இதை பரிமாறியுள்ளனர். கருத்து வெளியிட்ட பலரும், ‘இந்த அமெரிக்க வெப்சைட் எப்போதும் போலி செய்தியை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தும். அதை நம்ப வேண்டாம்’ என்று கூறியுள்ளனர்.
இதனையடுத்து அசாம் கிரைம் பிரிவு பொலிஸ், குறித்த இணையத்தளத்தின் மீது அவதூறு கிளப்பியதாக வழக்கு பதிவு செய்துள்ளது. இதனை தொடர்ந்து இந்த இணையத்தளம் இந்தியாவில் தெரிவது முடக்கப்பட்டதுடன் சர்ச்சையை கிளப்பிய செய்தியை அகற்றி உள்ளது.





