நடுரோட்டில் இளைஞனின் உயிரைக் காப்பாற்றிய பொலிஸ் : குவியும் பாராட்டுக்கள்!!

597

தமிழகத்தில் விபத்தில் சிக்கி சுயநினைவை இழந்த இளைஞனுக்கு மீண்டும் சுயநினைவை கொண்டு வந்த பொலிசாருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

சென்னை எழும்புர் ஆதித்தனார் சிலை ரவுண்டனா அருகே இன்று காலை அதிவேகமாக இரு சக்கர வாகனத்தில் வந்த இளைஞர், முன்னால் சென்ற காரின் மீது மோதியதால், அவர் அந்த இடத்திலே சுயநினைவை இழந்தார்.

இதைக் கண்ட அங்கிருந்த போக்குவரத்து காவலர் சிவக்குமார், உடனடியாக அந்த இளைஞரை மீட்டு நெஞ்சுப்பகுதியில் கையை வைத்து அழுத்தி சுயநினைவை வரவழைத்தார்.

அதன் பின் அந்த நபர் ஆம்புலன்ஸ் உதவியுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு உள்ளிட்ட சில சம்பவங்களால் பொலிசார் மீது ஆத்திரத்தில் இருக்கும் மக்கள், தற்போது காவலர் சிவக்குமாரின் செயலை பாராட்டி வருகின்றனர்.