வவுனியாவில் தபால் ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு : மக்கள் திண்டாட்டம்!!

636

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தபால்துறை ஊழியர்கள் மேற்கொண்டு வரும் பணிப் பகிஸ்கரிப்பு போராட்டத்தால் வவுனியாவில் தபால்துறை முடங்கிக் காணப்படுகின்றது.

தகுதிகாண் காலம் நிறைவடைந்த 11வகுப்பு அஞ்சல் சேவை உத்தியோகத்தர்களின் நியமனங்களை உடனடியாக உறுதி செய், 2018 ஜனவரி 10ம் திகதி வாக்குறுதியளித்த கெபினெட் பத்திரிகைக்கு உடனடியாக ஒப்புதல் வழங்கு, கணிணி தொழிநுட்ப கோளாறுகளை உடனடியான சீர் செய், 2012 பொறுப்பு பரீட்சையை நடைமுறைப்படுத்தல் பொறுப்புக் கொடுப்பனவை உடனடியாக பெற்றுக்கொடு,

பொறுப்பு பரீட்சையில் சித்தியடைந்த 1ம் வகுப்பு உத்தியோகத்தர்களுக்கு எம்.என் – 7 வேதன மட்டத்தினைப் பெற்றுக் கொடு, விரிவுரையாளர் கொடுப்பனவை புதிய சம்பளத்திற்கு பெற்றுக்கொடு என்ற கோரிக்கையினை முன்வைத்து இன்று 2018 ஜீன் 04 நள்ளிரவு 12 தொடக்கம் 05 நள்ளிரவு 12 வரையிலான இரண்டு நாட்கள் அடையாள வேலை நிறுத்தம் மேற்கொண்டுள்ளனர்.

இதன் காரணமாக வவுனியா பிரதான தபால் நிலையம் உட்பட அனைத்து தபால் நிலையங்களும் மூடப்பட்டு காணப்படுகின்றது.

ஊழியர்கள் பணியில் இன்மையால் பல்வேறு தேவைகளுக்காகவும் தபால் நிலையங்களுக்கு வருபவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்வதை காணக்கூடியதாக உள்ளது.