வவுனியாவில் அண்மையில் குட்செட் வீதியிலுள்ள 8 மாதமான ஆண் குழந்தை ஒன்று கடத்தப்பட்டு புதுக்குடியிருப்புப் பகுதியிலிருந்து மீட்கப்பட்டிருந்தது.
சம்பவம் தொடர்பாக இரண்டு பெண்களைக் கைது செய்த பொலிசார் இன்று மேலும் ஒரு சந்தேக நபரான நந்தகோபால் கோபால் என்ற 33 வயதுடைய புதுக்குடியிருப்புப் பகுதியைச் சேர்ந்த ஒருவரையும் கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
அதிகாலை 2 மணியளவில் வீட்டிற்குள் நுழைந்த 6 மர்ம நபர்களினால் 8 மாதமுடைய ஆண் குழந்தை கடத்தப்பட்டு 3 தினங்களின் பின்னர் பதுக்குடியிருப்புப் பகுதியில் வைத்து மீட்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் அன்றைய தினம் இரண்டு பெண்களைக் கைது செய்த பொலிசார் அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையை அடுத்து இன்று மேலும் ஒரு நபரைக் கைது செய்துள்ளதாகவும் இவர்களிடம் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதுடன் இன்றைய தினம் நீதவான் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பொலிசார் மேலும் தெரிவித்தனர்.





