தமிழகத்தின் புதுக்கோட்டை அருகே நேற்று காலை நடந்த விபத்தில் தம்பதியினர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டையின் கந்தர்வக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணியன்(வயது 55), இவரது மனைவி பத்மா(வயது 45), மூன்று மகள்கள் உள்ளனர். இவர்கள் இருவரும் நேற்று உறவினர் வீட்டு திருமணத்தில் பங்கேற்பதற்காக பைக்கில் சென்றுள்ளனர்.
அப்போது கறம்பக்குடி அருகே சடையன்தெரு பகுதியில் சென்று கொண்டிருந்த போது அரசு பேருந்தும், பைக்கும் நேருக்கு நேர் மோதிக் கொண்டது.
இதில் பலத்த காயமடைந்த சுப்பிரமணியன் சம்பவ இடத்திலேயே பலியானார், பத்மா உயிருக்கு போராடிய நிலையில் உடனடியாக பொதுமக்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி பத்மாவும் பலியானார், இதனை தொடர்ந்து பேருந்தின் டிரைவரான துரைராஜை கைது செய்து பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தாய்- தந்தையின் உடலை பார்த்து மூன்று மகள்களும் கதறிய சம்பவத்தால் அப்பகுதியே சோகத்தில் மூழ்கியது.





