சுற்றுப் புறச் சூழலுக்கு தீங்கை விளைவிக்க கூடிய வகையில் அதிகளவான புகையை வெளியிட்ட 3000 வாகனங்களை கறுப்பு பட்டியலில் இடுவது தொடப்பில் மோட்டார் வாகன போக்குவரத்து அதிகாரசபை நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்த வருடத்தின் இதுவரையான காலத்தினுள் மேற்கொண்ட தேடுதலின்போது இவ் வாகனங்கள் தொடர்பில் கண்டறியப்பட்டுள்ளது.
குறித்த வாகனங்கள் போக்குவரத்துக்கு உகந்த நிலையில் இல்லாமையின் காரணமாக கறுப்பு பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் எதிர்வரும் காலங்களிலும் நாடு முழுவதிலும் வாகனங்களை பரிசோதிக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.