இலங்கை வரலாற்றின் பாரிய பாதுகாப்பு திட்டம் ஒன்று பொதுநலவாய அரச தலைவர்களது மாநாட்டை முன்னிட்டு இன்று நடைமுறைக்கு வருகிறது.
இதன்படி 676 இராணுவ அதிகாரிகளின் கீழ் 18,000 இராணுவ சிப்பாய்கள் மற்றும் 20,000 பொலிஸ் அதிகாரிகள் கடமையில் ஈடுபடுத்தப்படுகின்றனர். இதேவேளை வெளிநாட்டு தலைவர்கள் பலரும் இன்று இலங்கை வரவுள்ளனர்.
பிரித்தானிய இளவரசர் சார்ள்ஸ் மற்றும் கெமிலா பர்கர் தம்பதியினர் எதிர்வரும் வியாழக்கிழமை இலங்கைக்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளனர்.
எதிர்வரும் 15ம் திகதி அரச தலைவர்கள் வருகைதரவுள்ள அதேவேளை, இவர்கள் எதிர்வரும் 16 தொடக்கம் 18ஆம் திகதிகளுக்கிடையில் இலங்கையிலிருந்து வெளியேறவுள்ளனர்.
இந்நிலையில் பொதுநலவாய மாநாட்டை முன்னிட்டு விசேட போக்குவரத்து ஒழுங்குகள் நேற்றிலிருந்து எதிர்வரும் 18ம் திகதிவரை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.