டெல்லியில் உள்ள தொழில் அதிபர் ஒருவரின் வீட்டில் வேலை செய்து வந்த நபர் ஒருவர், தன்னுடன் அதே வீட்டில் வேலை செய்யும் இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து அதை வீடியோ எடுத்து இணையத்தில் வெளியிட்டுள்ளார்.
டெல்லியில் உள்ள கிரேட்டர் கைலாஷ் ரெசிடன்ஸில் வசிக்கும் தொழில் அதிபர் ஒருவரின் வீட்டில் வேலை செய்தவர் கார்த்திக் குலியா(32). கடந்த ஆண்டு அவர் அதே வீட்டில் வேலை செய்யும் 20 வயது பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து அதை வீடியோ எடுத்துள்ளார்.
இதையடுத்து தனது ஆசைக்கு இணங்காவிட்டால் வீடியோவை இணையத்தில் வெளியிடுவேன் என்று கூறி மிரட்டியே அப்பெண்ணுடன் உறவு வைத்து வந்துள்ளார்.
இந்நிலையில் அந்த பெண்ணின் சகோதரரின் நண்பர் ஒருவர் எம்.எம்.எஸ். ஒன்றை இணையதளத்தில் பார்த்துள்ளார். உடனே அந்த பெண்ணின் சகோதரரிடம் வந்து நான் ஒரு எம்.எம்.எஸ். பார்த்தேன், அதில் வந்த பெண்ணை பார்த்தால் உன் சகோதரி போன்று உள்ளது என்று தெரிவித்துள்ளார்.
இதையடுத்து அந்த பெண்ணிடம் விசாரித்தபோது தான் உண்மை வெளியே வந்தது. இதையடுத்து அந்த பெண்ணை அவரது சகோதரர் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று புகார் கொடுக்க வைத்தார். அவரது புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்த பொலிசார் கார்த்திக்கை கைது செய்தனர்.