வவுனியாவில் உலக சுற்றாடல் தினம்!!

1051

வவுனியா மாவட்ட செயலகம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ ஒருங்கிணைப்புக்குழு என்பன இணைந்து ஏற்பாடு செய்த உலக சுற்றாடல் தினம் இன்று (05.06.2018) காலை 9.30 மணியளவில் அரசாங்க அதிபர் வாசஸ்தலத்தில் மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவின் உதவிப்பணிப்பாளர் எஸ்.சூரியகுமார் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் விதான பத்திரன, மேலதிக அரசாங்க அதிபர் தி.திரேஸ்குமார், வவுனியா பிரதேச செயலாளர் கா.உதயராஜா, செட்டிகுளம் பிரதேச செயலாளர் எஸ்.சிவகரன் மாவட்ட திட்டப்பணிப்பாளர், மாவட்ட கணக்காய்வாளர், பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள்,

வவுனியா வளாக பல்கலைக்கழக இரண்டாம் வருட மாணவர்கள், மாணவிகள், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் எனப்பலரும் கலந்துகொண்டுடதுடன் பல்கலைக்கழக மாணவர்கள் பிளாஸ்ரிக் மாசாதலை இல்லாது ஒழிப்போம் எனினும் பொருளில் வழிப்புனர்வு கருத்துரைகளை வழங்கியிருந்தார்கள்.

இவ்வருடம் இலங்கையில் உலக சற்றாடல் தினம் பிளாஸ்ரிக் மாசாதலை இல்லாது ஒழிப்போம் எனினும் தொனிப்பொருளில் இடம்பெற்றுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

நிகழ்வின் இறுதியில் அரசாங்க அதிபர் வாசஸ்தலத்தின் வளாகத்தில் அதிதிகள், பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்களினால் மரக்கன்றுகள் நாட்டிவைக்கப்பட்டது.