வவுனியா மக்களுக்கு ஏற்பட்டுள்ள துர்ப்பாக்கிய நிலை!!

403

வவுனியாவிலுள்ளவர்களின் தேங்காய் தேவையைப்பூர்த்தி செய்து கொள்வதற்கு கிட்டத்திட்ட ஒரு நாளைக்கு 10 இலட்சம் ரூபாவிற்கு வெளிமாவட்டத்திலிருந்து தேங்காய்கள் கொள்முதல் செய்யவேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

தற்போதுள்ள தேங்காயின் தட்டுப்பாடு காரணமாகவே இந்நிலை ஏற்பட்டுள்ளது. இதேவேளை வவுனியாவிலுள்ள தேங்காய்கள் இங்குள்ளவர்களின் தேவைகளுக்குப் போதுமானவையாக காணப்படுகின்றபோதிலும் வவுனியாவிலிருந்து வெளிமாவட்டங்களுக்கு தேங்காய்கள் ஏற்றிச்செல்வதாலே இந்நிலை காணப்படுகின்றது.

கிட்டத்தட்ட ஒரு நாளைக்கு எம்மால் பயன்படுத்தப்படும் உணவுத்தேவைக்கு 3 தேங்காய் எமக்குத் தெரிந்தோ தெரியாமலோ தேவைப்படுகின்றது.

இத்தேவைகளுக்கு எமது பகுதிகளிலிருக்கும் தேங்காய்கள் போதுமானவையாகவே காணப்படுகின்றபோதிலும் இங்குள்ள தேங்காய்கள் வெளிமாவட்டங்களுக்கு அதிக விலைபேசி அனுப்பிவைக்கப்படுவதால் வவுனியாவில் தேங்காய்க்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இதனால் வெளிமாவட்டங்களிலிருந்து தேங்காய் இறக்குமதி செய்யவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. நாள் ஒன்றிற்கு வவுனியாவிலுள்ள 10இலட்சம் ரூபா பணம் வெளிமாவட்டங்களுக்கு தேங்காய் கொள்வனவிற்காக செல்வதாகவும் இதன்காரணமாக வவுனியாவிற்கு வரவேண்டிய அப்பணம் வேறு மாவட்டத்திற்குச் செல்வதாக அந்த ஆய்வில் மேலும் தெரியவருகின்றது.

இதனைக்கட்டுப்படுத்தவதற்கோ அல்லது இங்கிருந்து வெளிமாவட்டங்களுக்கு தேங்காய் எடுத்துச் செல்லப்படுவதை தடுப்பதற்கும் விலையைக் குறைப்பதற்கோ எவ்வித நடவடிக்கையும் இங்குள்ள மக்கள் பிரதிநிதிகளினால் இன்றுவரையில் மேற்கொள்ளப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.