வவுனியாவில் சட்டவிரோத வலைகள் மீட்பு!!

423

இன்று (06.05.2018) காலை 10 மணியளவில் வவுனியாவில் உள்ள தேசிய நீர் உயிரினச் செய்கை அபிவிருத்தி அதிகாரசபை மற்றும் விசேட அஅதிரடிப்படையினர் இணைந்து நாடாத்திய திடீர் சுற்றிவளைப்பு ஒன்றில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்

சூடுவெந்தபுலவு மற்றும் பாவற்குளம் பகுதிகளில் நன்நீர் மீன்பிடித்தலில் சட்ட விரோதமாக தடை செய்யப்பட்ட தங்கூசி வலைகளை உபயோகித்து மீன்பிடித்தலில் ஈடுபட்டவர்களை கைது செய்யும் நோக்கில் இடம்பெற்ற இச்சுற்றிவளைப்பில் சூடுவந்தபுலவை சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் ரூபா 150 000 பெருமதியான தடைசெய்யப்பட்ட தங்கூசி வலைகளும் கைப்பற்றப்பட்டுள்ளன. கைப்பற்றப்பட்ட வலை மற்றும் நபரையும் இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர்

மேலும் சுற்றிவளைப்பானது வவுனியா, மன்னார் மாவட்ட நீர் உயிரின செய்கை விரிவாக்கல் அதிகாரி யோகநாதன் நிசாந்தன் தலமையிலான உத்தியோகத்தர்கள் குழு மற்றும் விசேட அதிரடிப்படையினரும் பங்கு கொண்டிருந்தனர்

ஊடகங்களிற்கு கருத்து தெரிவித்த வவுனியா,மன்னார் மாவட்ட நீர் உயிரின செய்கை விரிவாக்கல் அதிகாரி யோகநாதன் நிசாந்தன், தடைசெய்யப்பட்ட தங்கூசி வலைகளை உபயோகித்து மீன்பிடிப்பதன் மூலம் நன்நீர் மாசடைவதாகவும் குளங்களில் மீன்களின் உயிரிழப்புக்கள் அதிகம் ஏற்படுவதாகவும் தெரிவித்த அவர் தொடர்ந்தும் இவ்வாறான சட்ட விரோத நடவடிக்கையில் ஈடுபடுபவர்களை கைது செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாகவும் தெரிவித்தார்.